மூன்று மாற்றங்களுடன் ஓவலில் இந்திய அணி..! பலனளிக்குமா? #EngvInd

இந்திய இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று மாலை ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. கடந்த இரண்டு மாதகாலமாக இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணம் இந்தப் போட்டியுடன் நிறைவடைகிறது. 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்டது. 

குக்

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில், இன்றைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என அந்த அணியின் கேப்டன் ரூட் தெரிவித்துள்ளார். எனினும் மோயீன் அலி சற்று முன்னதாக களமிறக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குக், இன்றைய போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணியில் நீண்ட காலம் விளையாடிய அனுபவ வீரரான அவருக்கு நல்ல செண்ட் ஆஃப் கொடுக்க  வேண்டும் என்று இங்கிலாந்து வீரர்கள் முயற்சி செய்வார்கள். 

இந்திய அணியைப் பொறுத்தவரையில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. புதிதாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள ப்ரித்வி ஷா அல்லது விஹாரி அணியில் சேர்க்கப்படலாம். இவர்களுக்குப் பதிலாக  கே.எல் ராகுல் அல்லது ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஷா அணியில் சேர்க்கும் பட்சத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் -க்கு ஓய்வு வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோன்று அஷ்வினுக்குப் பதிலாக ஜடேஜா அணியில் சேர்க்கப்படலாம்.

இந்திய அணி

இன்றைய போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் ஆடுகளம் கடந்த போட்டிகள் போன்று இல்லாமல் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு அணி பேட்ஸ்மேன்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். எனினும் போட்டி நடைபெறும் இந்த வாரம் முழுவதும் அவ்வப்போது மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டியில் மழையின் தாக்கமும் அதிகமாக இருக்கும்.    

ஓவல் மைதானம்

Photo: BCCI/Twitter

இன்றைய போட்டியின் முடிவு தொடரில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், ஓய்வு பெறும் குக் -க்கு வெற்றியைச் சமர்ப்பிக்க இங்கிலாந்து அணியும், தொடரை இழந்துவிட்டாலும் வெற்றியுடன் இங்கிலாந்து தொடரை முடிக்க இந்திய அணியும் கடுமையாக போராடும். மேலும் 1-4 என்ற படுதோல்வியுடன் தொடரை முடிக்க இந்திய அணியும், இந்திய ரசிகர்களும் விரும்பமாட்டார்கள். எனவே, தொடரை இழந்துவிட்டாலும் 2-3 என்ற கணக்கில் முடிக்க தான் கோலி அண்ட் கோ முயற்சி செய்யும். போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்குத் தொடங்கும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!