``புதுச்சேரி ரஞ்சி அணியில் வட மாநிலத்தவர்களா?”- கொதிக்கும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள்

விஜய் ஹசாரே கோப்பைக்கான புதுச்சேரி ரஞ்சி அணியில் வட மாநிலத்தவர்களே அதிகம் இடம் பெற்றிருப்பதால், கொதித்துப் போய் இருக்கின்றனர் புதுச்சேரி கிரிக்கெட் வீரர்கள்.

ரஞ்சி அணி

புதுச்சேரியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவதற்கு உரிமை அளிக்கும் வகையில், `கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி' இந்திய கிரிக்கெட் வாரியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கு பெறுவதற்கான அணிகள் தேர்வு நடைபெற்றது. அதன்படி 35 வீரர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குப் பயிற்சி தரப்பட்டது. அதில் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் மதுரை பேந்தர்ஸ் அணியில் விளையாடிய ரோஹித்துக்கு அணித் தலைவர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. ரஞ்சி டிராபியில் புதுச்சேரி அணி உத்தரகாண்டுடன் செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறும் போட்டியில் மோத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிரிக்கெட்

வெளியிடப்பட்ட அணி வீரர்கள் பட்டியலில், டி.ரோஹித் (கேப்டன்), பாபித் பாரக் அகமத் (துணை கேப்டன்), அபிஷேக் நாயர், பங்கஜ் சிங், பாரஸ் டோக்ரா, தலைவன் சற்குணம், சாகர் உதேசி, பரிக்சித் சஞ்சய் வல்சாகர், நிகிலேஷ் சுரேந்திரன், இக்லாஸ் நாகா, சச்கங் சிங், சாகர் விஜய் திரிவேதி, ஆசித் ராஜிவ் ஷன்கனகல், அப்துல் ஜாஃபர், விக்னேஷ்வரன் மாரிமுத்து, கோவிந்தராஜன், மாதவன் மனோகர், பிரபாகரன் கோபாலகிருஷ்ணன், விக்னேஷ்வர், யாஷ் அவினாஸ் ஜாதவ், சாஜு டைட்டஸ், சசிகுமார் சுப்ரமணியன், சரவணன் கன்னியப்பன், ஷாஜு, சபரி ராஜசேகர் என்ற பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.

தற்போது தேர்வாகியுள்ள புதுச்சேரி ரஞ்சி அணியில், புதுச்சேரியைச் சேர்ந்த வீரர்களைவிட வட மாநிலத்தவர்களே அதிக அளவில் இடம்பெற்றிருக்கின்றனர். அதனால், ``புதுச்சேரி ரஞ்சி அணி என்று பெயர் வைத்துக்கொண்டு வட மாநிலத்தவர்களை களம் இறக்குவது எந்த விதத்தில் நியாயம்” என்று கொதிக்கிறார்கள் புதுச்சேரி கிரிக்கெட் வீரர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!