`சொதப்பிய மூன்று வீரர்கள், கைகொடுக்கும் ஹனுமா விஹாரி' - இரண்டாம் நாள் ஆட்டத்தில் நிதானம் காட்டிய இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 174 ரன்கள் குவித்துள்ளது. 

photo credit: twitter/@ICC

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்கிஸ், ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்தது. முதல்நாள் ஆட்டத்தில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர், குக் மற்றும் மொயின் அலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இரண்டு பேரும் அரைசதம் கடந்தனர். இதில் குக் 71 ரன்களையும், மொயின் அலி அரை சதமடித்தும் வெளியேறினர். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் - ஸ்டுவர்ட் பிராட் ஜோடி இந்திய அணிக்கு பெரும் சவாலாகத் திகழ்ந்தது. ஒருவழியாக இந்த ஜோடியை ரவீந்திர ஜடேஜா பிரித்து நிம்மதியடைய வைத்தார். 9வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தது இந்த ஜோடி. இதனால் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 332 ரன்கள் குவித்தது. 

இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் தவான் இணை தொடக்கம் தந்தது. தவான் 3 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுக்க அடுத்து இணைந்த ராகுல் - புஜாரா ஜோடி நிதானம் காத்தது. ராகுல் 37 ரன்களுக்கு வெளியேற புஜாராவும் 37 ரன்களுக்கு அவுட் ஆனார். மறுமுனையில் இருந்த நிதானம் காட்டிய கேப்டன் கோலியோ, 49 ரன்களுக்கு அவுட் ஆகி அரை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். பின்னர் வந்த ரஹானே பூஜ்யத்தில் வெளியேறினார். இதேபோல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம்வீரர் ரிஷப் பாண்ட்டும் 8 ரன்களுக்கு அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.

photo credit: twitter/@ICC

இந்த டெஸ்ட்டில் அறிமுகமான ஹனுமா விஹாரி பொறுப்பாக ஆடினார். அவர் 50 பந்துகளில் 25 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன் ரவீந்தர ஜடேஜா 8 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளார். இரண்டாம் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் தவான், ரஹானே, ரிஷப் பாண்ட் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகினர். இது இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை விட தற்போது இந்தியா 158 ரன்கள் பின்தங்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!