`பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினர்'- இங்கிலாந்து வீரர்கள் குறித்து கோலி

``இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்'' என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்

ஓவல் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 332 ரன்களும், இந்திய அணி 292 ரன்களும் எடுத்தன. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து, இந்திய அணி வெற்றிபெற 464 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 345 ரன்களுக்கு ஆட்டம் இழந்து 118 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால், 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து. 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, `இந்தத் தொடர் மிகவும் முக்கியமானது என இரு அணி வீரர்களுக்கும் நன்கு உணர்ந்திருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் குறிப்பிட்டுச் சொல்லும் போட்டி இது. இந்திய அணி வீரர்களுக்கு இன்னும் சில அனுபவங்கள் தேவை. இங்கிலாந்து அணி வீரர்களின் நேர்த்தியான ஆட்டத்தை 2-3 ஓவர்களிலே புரிந்துகொண்டோம். அதனால்தான் டிராவை நோக்கி ஆட்டம் செல்லவில்லை. இங்கிலாந்து அணி வீரர்கள் பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினர்' என்று கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!