`ஜீரோ க்ராவிட்டியிலும் நான்தான் கெத்து' - வைரல் உசைன் போல்ட்..!

இந்த விமானமானது க்ராவிட்டி இல்லாததுபோல செயற்கைச் சூழலை உண்டாக்கவல்லது. இது உண்மையாக விண்வெளியில் இருப்பதைப் போன்ற ஜீரோ க்ராவிட்டி கிடையாது.

ஜமைக்காவை சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட். இவரை பற்றியெல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. உலகின் வேகமான மனிதன் என அனைவரும் ஒப்புக்கொள்ளும் இவர் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஒட்டப்பந்தயங்களில் உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரர். எட்டு ஒலிம்பிக் தங்கங்களும் இவர் கைவசம் உள்ளன.

இவர் நேற்று பிரான்ஸில் ஏர்பஸ் எ310 ரக ஜீரோ க்ராவிட்டி விமானத்தில் பயணம் செய்தார். இந்த விமானமானது க்ராவிட்டி இல்லாதது போன்ற செயற்கை சூழலை உண்டாக்கவல்லது. இது உண்மையாக விண்வெளியில் இருப்பதைப் போன்ற ஜீரோ க்ராவிட்டி கிடையாது. ஆனால், க்ராவிட்டி மிகக் குறைந்த அளவிலேதான் இருக்கும். இதில் ஜாலியாக ட்ரிப் அடித்த போல்ட், அங்கிருந்தவர்கள் விளையாட்டாக விடுத்த சவாலை ஏற்று ஜீரோ க்ராவிட்டியில் ஒரு சிறிய ஓட்டப்பந்தயத்தில் பங்குபெற்றார். இதிலும் தட்டுத்தடுமாறி முதல் இடம் பிடித்தார் போல்ட். மேலும், அங்கு சம்பைன் அருந்தி ஆனந்தமாக இருந்த போல்ட் இதை வீடியோவாக சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டார்.  ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லிடா என்று இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!