கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது ஏன்? மனம் திறக்கும் தோனி

'உலகக்கோப்பைத் தொடருக்கு அணியைத் தயார்செய்ய விராட் கோலிக்கு தேவையான நேரம் அளிப்பதற்காகவே, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன்' என்று தோனி தெரிவித்துள்ளார். 

தோனி

இந்திய அணியின் கேப்டனாக இருந்து சிறப்பான பங்களிப்பை அளித்த மகேந்திரசிங் தோனி, 2017-ம் ஆண்டு ஜனவரியில் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இந்த நிலையில், ராஞ்சியில் ஒரு விழாவில் தோனி கலந்துகொண்டார். அப்போது, 'இந்திய அணி ஒரு தொடருக்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவதைத் தவறவிட்டது. அதனால்தான், வீரர்கள் கடினமான நேரத்தில் தடுமாறுகின்றனர். எனினும், தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதியாகும். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்கு, அடுத்துவரும் கேப்டன் அணியைத் தயார் செய்வதற்குத் தேவையான நேரத்தை எனக்கு வழங்க வேண்டும் என்பதற்காகவே, நான் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன். தேவையான அளவு நேரத்தை வழங்காமல், புதிய கேப்டன் ஒரு வலுவான அணியைத் தேர்வுசெய்வது சாத்தியமில்லை. நான் சரியான நேரத்தில் கேப்டன் பொறுப்பை விட்டேன் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!