சிக்ஸர் அடிப்பவர்கள் எல்லாம் தோனியா? - மனம் திறந்த சேவாக்

`தோனி தனி நபராக அணிக்கு வெற்றி தேடித் தரக்கூடிய வீரர். அவர் கண்டிப்பாக 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டும்' என வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

தோனி

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் மனம் திறந்துள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள சேவாக், `` மகேந்திர சிங் தோனி 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டும் என்பது எனது விருப்பம். ஒருவேளை ரிஷப் பந்துக்கு தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு அளித்தாலும் உலகக்கோப்பை தொடர் வரை 15 முதல் 16 போட்டிகளில்தான் அவரால் விளையாட முடியும். தோனியுடன் ஒப்பிட்டால் இது உலகக்கோப்பைக்கு போதுமானது அல்ல. தோனி 300-க்கும் மேற்பட்ட ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ரிஷப்  தோனி போன்று அதிரடியாக சிக்ஸர் அடிக்கலாம். ஆனால், நீங்கள் தோனி குறித்துப் பேசினால். அவர் தனி நபராக அணிக்கு வெற்றியைத் தேடித்தரக்கூடியவர்” என்றார்.

ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி  ஆசியக்கோப்பை தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் தோனி இடம்பெற்றுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!