வெளியிடப்பட்ட நேரம்: 11:09 (15/09/2018)

கடைசி தொடர்பு:11:28 (15/09/2018)

”விளம்பரங்களில்தான் என் மகள் அதிகம் சம்பாதிக்கிறார்!" - பேட்மின்டன் சிந்து தாயார் பேட்டி #Vikatanbreaks

பேட்மின்டன் சிந்து

சமீபத்திய ஜப்பான் ஓப்பன் போட்டியில், பிரபல பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெளியேறினாலும், தனது கரியரிலும் பர்சனலாகவும் செம குஷியில் இருக்கிறார். உலக பேட்மின்டன் தரவரிசையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றது, சர்வதேச அளவில் இயங்கும் 'ஹர்மன்’ பிராண்டின் விளையாட்டு இயர்போனுக்கு விளம்பரத் தூதரானது, ஃபோர்ப்ஸ்             ( Forbes) வெளியிட்ட, உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலில் ஏழாவதாக இடம்பிடித்தது, அக்கா திவ்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சி என பி.வி.சிந்துவின் காட்டில் மகிழ்ச்சி மழைதான். இதைப் பற்றி சிந்துவின் அம்மா விஜயாவிடம் பேசினேன்.

“ஆமாம். சிந்து செம குஷியில் இருக்கிறாள். அக்காவுக்கு குழந்தை பிறந்தது முதல், பயிற்சி முடிச்சு வந்ததும் குட்டிப் பையனுடன் விளையாடுவார். இப்போ, நேரம்தான் கிடைக்கிறதில்லை. ஜப்பானிலிருந்து 25-ம் தேதிக்கு மேலேதான் வருவாள். திவ்யா பையனுக்கு தொட்டில் போடும் விழா கொண்டாடினோம். குட்டிப் பையனின் பெயர், ஆரியன். அவன், ஜூலை 4-ம் தேதி பிறந்தான். சிந்துவுக்கு ஜூலை 5-ம் தேதி பிறந்தநாள். ஸோ, இந்த ஆண்டு எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல். குழந்தையுடன் விளையாடுவதும் ஃபோட்டோ எடுப்பதுமே சிந்துவின் ஹாபி. எங்கள் வீட்டில் சிந்துக்குப் பிறகு ரொம்ப நாள் கழிச்சு, ஒரு குழந்தை தவழ்வது அவ்வளவு சந்தோஷமா இருக்கு” என்று நெகிழ்கிறார்.

''பேட்மின்டனில் சம்பாதித்ததைவிட, விளம்பரங்களால்தான் சிந்து அதிகம் சம்பாதித்ததா'' ஃபோர்ப்ஸ் பட்டியலில் சொல்லியிருக்காங்களே...'' என்று கேட்டதற்கு, “உண்மைதான், பேட்மின்டன் போட்டிகளில் ஓரளவுதான் சம்பாதிக்க முடியும். சிந்துவுக்கு விளம்பர வாய்ப்புகள் வருது. அதனால் சம்பாதிக்கிறாள்” என்று யதார்த்தமாகக் கூறினார் விஜயா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க