`அவரின் வார்த்தை எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது'- ஆஸி. வீரரால் பொங்கிய இங்கி. வீரர்

'ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின்போது, ஆஸ்திரேலிய வீரரின் செயல் என்னை மிகவும் காயப்படுத்தியது' என இங்கிலாந்து வீரர் மொய்ன் அலி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்

2015-ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரின்போது, ஆஸ்திரேலிய வீரர்கள் தன்னிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்டதாகவும், தான் வெறுக்கும் அணி ஆஸ்திரேலியா எனவும் இங்கிலாந்து வீரர் மொய்ன் அலி தெரிவித்துள்ளார். ``2015-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பு, சிட்னியில் முதன்முறையாக ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடினேன். போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் என்னைப் பார்த்து, ‘ஒசாமா’ என்று அழைத்தார். இதுகுறித்து களத்தில் இருந்த சகவீரர்களிடம் தெரிவித்தேன். பின்னர், ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லெக்மென் (Lehmann) மூலம் இந்த விவகாரம் கொண்டுசெல்லப்பட்டது.

அவர் அந்த வீரரிடம்,  '‘மொய்னை, ஒசாமா என அழைத்தீர்களா” என்று கேட்டார். ஆனால் அந்த வீரர், ''தான் அவ்வாறு அழைக்கவில்லை'' என்று மறுத்துவிட்டார். அந்தப் பகுதிநேர ஆட்டக்காரரை வெளியேற்றுங்கள் என்றுதான் கூறினேன். வார்த்தைகளுக்கான வித்தியாசம் எனக்குத் தெரியாமல் இல்லை. ‘' 'ஒசாமா என்பதற்கும் பார்ட் - டைமர்’ என்ற வார்த்தைக்கும் வித்தியாசம் உள்ளது. அந்த வீரரின் செயல் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தொடர் முழுவதும் அது எனக்கு மன அழுத்தத்தைக் கொடுத்தது'' என்று தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!