வெளியிடப்பட்ட நேரம்: 01:48 (16/09/2018)

கடைசி தொடர்பு:01:48 (16/09/2018)

ஆசியக் கோப்பைத் தொடர் - 137 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷிடம் படுதோல்வியடைந்த இலங்கை

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6  ஆசிய அணிகள் கலந்து கொள்ளும் 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் இன்று தொடங்கியது. ஆறு அணிகளும் A மற்றும் B என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. அதன்படி முதல் போட்டியாக, B பிரிவில் இடம்பெற்ற இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்கள் எடுத்திருந்தது.

இலங்கை தோல்வி கிரிக்கெட்

அதிகபட்சமாக அந்த அணியின் முஷ்பிகுர்  ரஹீம் 150 பந்துகளில் 144 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியின் லசித் மலிங்கா 23 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 262 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய இலங்கை அணி வங்கதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்தே தடுமாறியது. கடைசியில் இலங்கை அணி 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக தில்ருவன் பெரேரா 29 ரன்களும், உபுல் தரங்கா 27 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இலங்கை அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆசிய கோப்பைக்கான  இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஹாங்காங் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.