ஆசியக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறினார் தமிம் இக்பால்!

ஆசியக் கோப்பை விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு எதிரான முதலாவது போட்டியில் வங்க தேசம் அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தமிம் இக்பால்

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 ஆசிய அணிகள் கலந்து கொள்ளும் 14-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 2-வது ஓவரில் சுரங்கா லக்மல் வீசிய பந்தை தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் எதிர்கொண்டார். அப்போது, பந்து அவரது இடது கையில் பட்டது. எதிர்பாராமல் பந்து கையில் பட்டதால் காயம் ஏற்பட்டு ரிட்டையர்டு ஹர்ட் முறையில் தமிம் பெவிலியன் திரும்பினார். 

இதன் பிறகு, களம் இறங்கிய வங்க தேச வீரர்கள் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்கள் எடுத்தனர். கடைசி விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹ்மான், தமிம் இக்பாலும் ஜோடி சேர்ந்தனர். காயத்தால் ஒரு கையால் மட்டுமே பேட் பிடித்து ஆடிய தமிம் இக்பால் 2 ரன்கள் எடுத்தார். ஆனால் ஒருகையால் விளையாடி நீண்ட நேரம் பாட்னர்ஷிப் கொடுத்தார். இதனால் இந்த ஜோடி 32 ரன்கள் எடுத்தது.

வங்க தேச வீரர்

இதன் பிறகு, 262 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணி வங்கதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்தே தடுமாறியது. கடைசியில் இலங்கை அணி 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது. 

இதற்கிடையே, பேட்டிங் செய்யும்போது ஏற்பட்ட காயம் காரணமாக, 6 வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், ஆசிய கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் இருந்து தமிம் இக்பால் வெளியேறியுள்ளார். ஒரு கையால் மட்டும் பேட் பிடித்து ஆடிய அவரது ஆட்டம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!