`நான் மீண்டுவரக் காரணமே அவர் தான்' - சச்சின் குறித்து நெகிழும் சர்தார் சிங்!

சச்சின் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என ஹாக்கி வீரர் சர்தார் சிங் தெரிவித்துள்ளார். 

சர்தார் சிங்

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர் இளம் வயதில் இந்திய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றதுடன் சுமார் 8 ஆண்டுகள் இந்திய அணியை வழிநடத்தினார். இவரது தலைமையின் கீழ் இந்திய அணி பல்வேறு தொடர்களில் சிறப்பாக விளையாடி உள்ளது. எனினும் கடந்த 2016ம் ஆண்டு இவர் கேப்டன் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார். சமீபத்தில் நடந்துமுடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தோல்வியடைந்த பின் சர்தார் சிங் ஆட்டத்திறன் மீது விமர்சனங்கள் எழுந்தன. இது சர்ச்சையான நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக  சர்தார் சிங் அறிவித்தார்.  ``அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடும் நேரம் இது. ஹாக்கியைத் தாண்டி உள்ள வாழ்க்கை குறித்து சிந்திக்க இதுவே சரியான தருணம். அதனால் ஒய்வு பெறுகிறேன்" எனக் கூறி ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதில், ``நான் காமன்வெல்த் போட்டியில் இருந்து வெளியேறியபோது நான் மிகவும் கவலையாக உணர்ந்தேன். உடனடியாக சச்சினிடம் பேசினேன். அவரிடம் நீங்கள் மோசமாக விளையாடிய போது என்ன செய்தீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் பதிலளித்தார். என்னிடம் நிறைய நேரம் பேசியவர் விமர்சனங்களை மறந்து எப்போவும் போல விளையாடுங்கள் என அறிவுரை கூறினார். மேலும் என்னுடைய வீடியோக்களை போட்டு காண்பித்து ஆட்டத்திறன் குறித்து விவாதித்தார். அவர் அளித்த உத்வேகம், அறிவுரை எனக்கு நிறைய உதவியது. குறிப்பாக கடந்த நான்கு மேலாக அவரின் அறிவுரை எனக்கு நிறையவே கைகொடுத்தது. மோசமான நிலையில் இருந்து நான் மீண்டு வருவதற்கு உதவிய சச்சின் தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன்" என உருக்கமாகக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!