’அதான் இந்தியாவின் கேப்டன் இருக்கிறாரே!' -கோலி இல்லா ஆசியக்கோப்பை தொடர் குறித்து ராயுடு

ஆசியக்கோப்பை விளையாட்டுத் தொடரில் கேப்டன் கோலி இல்லையென்றாலும், இந்தியாவின் கேப்டன் தோனி இருக்கிறார். நிச்சயம் இந்திய அணி சாதிக்கும் என பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு கூறுகிறார். 

தோனி குறித்து ராயுடு

ஆசியக்கோப்பை விளையாட்டுப்போட்டி துபாயில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ரன் மெஷின் கேப்டன் கோலிக்கு ரெஸ்ட் கொடுக்கவே, ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஹாங்காங் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் செப்., 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. லீக் சுற்றின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுகின்றன. 

அதன்படி, இலங்கைக்கு எதிரான முதலாவது லீக் சுற்றில் வங்க தேசம் அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அம்பதி ராயுடு கூறுகையில், `அணியில் விராட் கோலி இடம்பெறாதது மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது. இருப்பினும், இந்திய அணியால் ஆசியக் கோப்பையில் சாதனைபடைக்க முடியும். அதுதான் `இந்தியாவின் கேப்டன் தோனி' அணியில் உள்ளாரே. அணியில் உள்ள அனைவருக்காகவும் இருப்பவர் தோனி. கடினமான நேரங்கள் என நான் உணர்ந்த சமயங்களில் மிகவும் உறுதுணையாக, பக்கபலமாக இருந்தவர் அவர்' என்றார்.  ராயுடு, கடந்த ஐ.பி.எல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!