வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (17/09/2018)

கடைசி தொடர்பு:08:16 (17/09/2018)

நீண்ட நாள் காதலியை மணந்தார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தன் நீண்ட நாள் காதலியான டேனி வில்லிஸை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

ஸ்மித்


 
பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஒரு வருடம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட்.  ஸ்மித் மற்றும் `வார்னர் சில உள்ளூர் லீக் போட்டிகளில் மற்றும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்

இந்த நிலையில், தனது நீண்ட நாள் காதலி டேனி வில்லிஸை செப்டம்பர் மாதம் திருமணம் செய்வதாக அறிவித்தார் ஸ்மித். அதன்படி இருவரும் நேற்று திருமணம் செய்துகொண்டனர்.  ``2011 -ம் ஆண்டு பிக்பாஸ் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவில்தான் மீட் பண்ணினேன் பார்த்தவுடன் காதல்தான். ஆனால், அவரிடம் சொல்லவில்லை  நட்பாக மட்டுமே இருந்தது. அப்போது நான் சிட்னி நகரில் சட்டம் படித்துக்கொண்டிருந்தேன். பல இடங்களுக்கு அவருடன் நான் சென்றிருக்கிறேன்" என்கிறார் டேனி. 

கடந்த ஆண்டு  இந்தியா வரும் போதும் கூட டேனியுடன் தான் வந்திருந்தார். விராட் கோலி உள்ளிட்ட சில இந்திய வீரர்களுக்கு டேனியை அறிமுகம் செய்து வைத்தாராம் ஸ்மித். ``கிரிக்கெட் எனக்கு  அந்தளவுக்கு தெரியாது. ஆனா இப்போது டிவில பார்த்து கிரிக்கெட் பத்தி நிறைய தெரிஞ்சு வச்சுருக்கேன்” என்று பதிவிட்டு உள்ளார் டேனி.
 
டேனியோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, ``ஸ்மித் உடன் ஒரு செல்பி. அவர் காதல் சொன்ன இடம்" என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ராக்ஃபெல்லர் மைய கட்டடத்தின் உச்சியில் நின்றுதான் காதலைச் சொன்னார் ஸ்மித். டேனியும் ஏற்றுக்கொண்டார். ராக்ஃபெல்லர் மையம் 19 வணிகக் கட்டடங்களைக் கொண்டுள்ளது. இது அமெரிக்காவின்  தேசியப்வரலாற்று சின்னமாம்!

டேனி வில்லிஸ் சட்டம் பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது திருமணத்தில் உஸ்மான் கவாஜா, நாதன் லயன் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.