வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (17/09/2018)

கடைசி தொடர்பு:08:27 (17/09/2018)

‘ஹாங்காங்கை பந்தாடியது பாகிஸ்தான் அணி!’ - இமாம் உல் ஹக் அரைசதம்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஹாங்காங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

 பாகிஸ்தான்

14-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இந்தப் போட்டியில் மோதுகின்றன. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணி  ஹாங்காங்கை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற  ஹாங்காங் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கத்துக்குட்டியான ஹாங்காங் அணி திணறியது. முடிவில் அந்த அணி 37.1 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஐஜாஸ் கான் 27 ரன்னும், கின்சிட் ஷா 26 ரன்கள் எடுத்தனர். 3 வீரர்கள் டக்-அவுட் ஆகி வெளியேறினர். பாகிஸ்தான் தரப்பில் உஸ்மான் கான் 3, ஹசன் அலி மற்றும் சதாப் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 23.4 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 50 ரன்கள் எடுத்தார்.