"இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்சா... ஆள விடுங்கடா சாமி!" - ட்விட்டருக்கு லீவு விடும் சானியா மிர்சா | Sania Mirza leaves social media citing India Pakistan crciket clash

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (19/09/2018)

கடைசி தொடர்பு:15:30 (19/09/2018)

"இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்சா... ஆள விடுங்கடா சாமி!" - ட்விட்டருக்கு லீவு விடும் சானியா மிர்சா

கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பிறகு, கடைசியாக சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் மோதிய இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று கிரிக்கெட்டில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்தப் போட்டியைக் காண ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அதிர்ச்சிதரும் ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார். இன்று, தனது ட்விட்டர் பதிவில் அவர், "இன்னும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற 24 மணிநேரத்துக்கும் குறைவான நேரம்தான் உள்ளது. தற்போதே, சமூக வலைதளங்களில் இருந்து சில நாள்கள் விலகி இருப்பதுதான் எனக்குப் பாதுகாப்பானது. இங்கு பரிமாற்றப்படும் கருத்துகள் சாதாரணமாக இருப்பவரையே மனநோயாளி ஆக்கிவிடும். நான் கர்பிணி, என்னை விட்டுவிடுங்கள். எப்படியும் இது ஒரு கிரிக்கெட் மேட்ச் தானே!" என்று கூறியுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக் தான் இவர் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியை காண ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அதிர்ச்சி தரும் ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார்

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சோயிப் மாலிக் இந்தியாவுடன் என்றுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். இந்தியாவுடன் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் இவர் பெயர் இருக்கும். கிட்டத்தட்ட 1661 ரன்கள் அடித்துள்ள இவர், இந்தியாவுடன் ஆடுகையில் 47.45 ரன்களை சராசரியாக வைத்துள்ளார். மற்ற அணிகளுடன் அவரை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியாவுடன் மட்டும் தொடர்ச்சியாக நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். வங்காளதேசம், ஜிம்பாப்வேவுக்கு அடுத்து, இந்தியாவுடன்தான் ஷோயிப் மாலிக்கின் ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக உள்ளது. எது எப்படி இருப்பினும், சமூக வலைதளங்களில் பிரபலங்களைத் தாக்கும் கலாசாரம் பெருகிக்கொண்டேதான்வருகிறது. சொந்த அடையாளத்தை மறைத்து, மாற்று அடையாளத்தில் ஒருவரைத் தாக்குவதால் இவர்களுக்கு என்ன கிடைக்கிறதென்பதுதான் புரியவில்லை! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க