வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (19/09/2018)

கடைசி தொடர்பு:16:50 (19/09/2018)

`4 மணி நேரத்தில் 2 கிலோ எடையைக் குறைத்தேன்!’ - குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் பர்சனல் ஷேரிங்ஸ

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், தன் போட்டித் தொடருக்காக வெறும் நான்கு மணி நேரத்தில் இரண்டு கிலோ எடையைக் குறைத்ததாகத் தெரிவித்துள்ளார். 

மேரி கோம்

இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம், இந்த ஆண்டில் இதுவரை மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். சமீபத்தில், போலந்தில் நடைபெற்ற சிலேசியன் சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்காக 2 மணிநேரத்தில் 4 கிலோ எடையைக் குறைத்ததாக மேரி கோம் கூறியிருக்கிறார். 

இதுபற்றி அவர் கூறும்போது, “ அதிகாலை 3:30 மணியளவில் நாங்கள் போலந்து சென்றடைந்தோம். காலை 7 மணிக்கு எனக்கு எடைப் பரிசோதனை இருந்தது. நான் போட்டியிட இருந்த 48 கிலோ எடைப் பிரிவைவிட சில கிலோக்கள் நான் அதிகமாக இருந்தேன். எடைப் பரிசோதனையில் பங்கேற்க நான்கு மணி நேரமே இருந்தது. அதற்குள் நான் எடையைக் குறைக்காவிட்டால், அந்தத் தொடரில் தகுதியடைய முடியாது. எனவே, தொடர்ந்து ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் செய்தேன். பிறகு, என் உடலை நன்கு ஸ்ட்ரெட்ச் ( stretch) செய்தேன், நான் போட்டிக்குத் தயாரானதாக எண்ணித் தைரியமாக இருந்தேன். இறுதியில், என்னால் 2 கிலோ வரை எடை குறைக்க முடிந்தது. மேலும், நல்லவேளையாக அன்று நாங்கள் சென்ற விமானத்தில் அவ்வளவு கூட்டம் இல்லை. அதனால், என்னால் கால்களை நீட்டி உறங்க முடிந்தது. மற்றபடி, இதை எப்படிச் செய்துமுடித்து தங்கம் வென்றேன் என்பதை என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. 

போட்டியைப் பொறுத்தவரை என் செயல்பாடுகளில் எப்போதும் நான் திருப்தி அடையவே மாட்டேன். ஒவ்வொரு தொடரின்போதும், புதிய யுக்திகளைச் செயல்படுத்துவதிலேயே ஆர்வம் காட்டுவேன். மேலும், என் போட்டியாளரைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள எனக்குப் பிடிக்கும். தெரிந்துகொண்ட பின், மெதுமெதுவாக அவரைப் போட்டியைவிட்டு அகற்றுவேன்” என்று பேசியுள்ளார்.