வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (21/09/2018)

கடைசி தொடர்பு:12:50 (21/09/2018)

ஹீரோவாக அவதாரம் எடுக்கும் விராட் கோலி! - வெளியானது ஆக்‌ஷன் போஸ்டர்

இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஆசியக்கோப்பை தொடரைக் கைப்பற்ற முனைப்புக்காட்ட, கோலி ஒரு போஸ்டரை வெளியிட்டு அனைவரையும் தன்பக்கம் இழுத்துள்ளார். 

விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி திரைப்படத்தில் நடிக்கப்போவதாக சமூகவலைதளங்களில் பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது. அதற்குக் காரணம் கோலி இன்று காலை வெளியிட்ட போஸ்டர்தான். ட்விட்டரில் கோலி இன்று காலை வெளியிட்ட போஸ்டரில் கோலி சூப்பர் ஹீரோ போன்று நிற்க, அதன் பின்னணியில் ஹாலிவுட் போஸ்டர் போன்று கார்கள் மோதிக் கிடக்கிறது.

இந்தப்படத்தின் பெயர் `டிரெய்லர் - தி மூவி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கும் மேல் விராட் கோலி அறிமுகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டரை வெளியிட்டுள்ள கோலி, `10 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒரு அறிமுகம். என்னால் காத்திருக்க முடியவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் வரும் 28-ம் தேதி வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே தினத்தில்தான் கோலியின் காதல் மனைவி அனுஷ்கா ஷர்மா நடிக்கும் `சுய் டாகா: மேட் இன் இந்தியா' படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

ஆனால், கோலி படத்தின் டிரெய்லர் வெளியாகுமா அல்லது படமே வெளியாகுமா என்று விவாதமே நடைபெற்றுகொண்டிருக்கிறது. சிலர் இது விளம்பரப்படத்துக்கான போஸ்டர் என்றும் சிலர் கூறி வருகின்றனர். எனினும் 10 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒரு அறிமுகம் என்று அவர் தெரிவித்திருப்பதால், நிச்சயம் இது அவரது சினிமா அறிமுகம்தான் என்கின்றனர் கோலி ரசிகர்கள். கோலி கிரிக்கெட்டில் அறிமுகமாகி சமீபத்தில்தான் 10 வருடங்களைக் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.