`சிறந்த கேப்டன் சர்ஃப்ராஸ்’ - பாகிஸ்தான் வீரருக்கு ஆதரவுக்கரம் நீட்டும் கங்குலி | Sarfraz is a great captain says Sourav Ganguly

வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (25/09/2018)

கடைசி தொடர்பு:12:33 (25/09/2018)

`சிறந்த கேப்டன் சர்ஃப்ராஸ்’ - பாகிஸ்தான் வீரருக்கு ஆதரவுக்கரம் நீட்டும் கங்குலி

``பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது சிறந்த கேப்டன். அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஊக்கப்படுத்த வேண்டும்'' என இந்திய அணி முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கங்குலி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றுவருகின்றன. இதில் நடைபெற்ற லீக் ஆட்டத்திலும், சூப்பர் ஃபோர் சுற்றிலும் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இது, பாகிஸ்தான் அணிக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. ஆப்கானிஸ்தானுடனான ஆட்டத்தின்போதும், பாகிஸ்தான் கடைசி ஓவரில் போராடியே வெற்றிபெற்றது. இதன் காரணமாக, பாகிஸ்தான் கேப்டன்  அகமது சர்ஃப்ராஸ் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. கேப்டன் பதவியிலிருந்து சர்ஃப்ராஸ் அகமது நீக்கப்பட வேண்டும் என்ற  குரல்கள் ஒலித்தன.

சர்பராஸ் அகமது

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுக்கு ஆதரவாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ``சர்ஃப்ராஸ் அகமது சிறந்த கேப்டன். அவரைப்போன்ற சிறந்த வீரர்கள் தினம் பிறப்பதில்லை. அவர் மிகவும் தைரியமானவர். கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை அப்பழுக்கற்ற முறையில் சிறப்பாக வழிநடத்தினார். தற்போது, சர்ஃப்ராஸுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், அந்நாட்டு முன்னாள் வீரர்களும் துணை நிற்க வேண்டும். அவருக்குத் தேவையான ஊக்கத்தை அளிக்க வேண்டும். இந்தத் தொடரில், அவர் சரியான முறையில் செயல்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.