வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (25/09/2018)

கடைசி தொடர்பு:19:30 (25/09/2018)

முகமது ஷஷாத் ஒன்மேன் ஷோ! ஆப்கானிஸ்தான் அசத்தல் பேட்டிங் #INDvAFG

இந்திய அணிக்கு எதிரானப் போட்டியில் தனியாக நின்று கலக்கி வருகிறார் ஆப்கான் தொடக்க ஆட்டக்காரர் முகமது ஷஷாத். 

ஷஷாத்

ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரராக ஷஷாத் மற்றும் அஹ்மதி இறங்கினர். இந்திய அணியின் பந்துவீச்சை கலீல் அகமது மற்றும் தீபக் சஹார்  தொடங்கினர். தொடக்கம் முதலே ஷஷாத் அதிரடியாக விளையாடினார். முதல் பந்திலிருந்தே அவர் டி20 மோடில்தான் விளையாடினார். திபக் சஹார் வீசிய ஒரே ஓவரில் 17 ரன்கள் எடுக்கப்பட்டது. ஒருபுறம் இவர் அதிரடியாக விளையாடினாலும் மறுபுறம் அஹ்மதி அடக்கி வாசித்தார். 30 பந்துகளைச் சந்தித்த 5 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

தோனி


ஷஷாத் 49 ரன்னில் இருக்கும்போது கொடுத்த கேட்சை ராயுடு ட்ராப் செய்ய தனது 14 வது அரைசதத்தை நிறைவு செய்தார். வேகப்பந்துவீச்சை ஷஷாத் அடித்து நொறுக்க, சுழற்பந்துவீச்சைக் கொண்டுவந்தார் தோனி. குறிப்பாகக் குல்தீப் யாதவ் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் சாய்த்துக் கலக்கினார். ஆனாலும், மறுபுறம் ஷஷாத் சிக்ஸரும் பவுண்டரியுமாக ஒன் மேன் ஷோவைத் தொடர்ந்தார். 21வது ஓவரில் கலீல் வீசிய பந்து பேட்டை உரசிச் சென்றதாக நடுவர் விக்கெட் கொடுக்க, டி.ஆர்.எஸ் மூலம் மேல்முறையீடு செய்து கண்டத்தில் இருந்து தப்பினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் பவுண்டரி அடித்து சர்வதேச அரங்கில் தனது 5வது சதத்தை அடித்தார். இதுவரை 10 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் அடித்து, தொடர்ந்து விளையாடி வருகிறார் ஷஷாத்.