வெளியிடப்பட்ட நேரம்: 16:54 (28/09/2018)

கடைசி தொடர்பு:16:58 (28/09/2018)

ஆசியக்கோப்பை யாருக்கு? - பந்து வீச்சுடன் களமிறங்கியது இந்தியா

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா

 

2018-ம் ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் லீக் சுற்றில் இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறின.  இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்குள் நுழைந்தன.

ஒவ்வொரு அணியும், மற்றொரு அணியுடன் தலா ஒருமுறை மோதின. அதன்படி, இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே நடந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதியதில் இந்தியா வென்றது. ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இறுதி ஓவரில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது பாகிஸ்தான். கடைசியாக நடைபெற்ற பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கிடையேயான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது. வங்கதேசம் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ள நிலையில், இந்தியா- வங்கதேசம் இடையிலான போட்டிகள் இன்று நடைபெறுகின்றன. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், தவான், ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, கேதர் ஜாதவ், ஜடேஜா, புவனேஷ்வர்குமார், சாஹல், பும்ரா, யாதவ் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மோர்தாசா தலைமையிலான வங்கதேச அணியில், தாஸ், சவும்யா சர்கார், ரஹிம், மிதுன், காயிஸ், மஹ்முதீன், ஹசன், இஸ்லாம், உசைன், ரஹ்மான் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் இந்தியா வெற்றி வாகையை சூடினால், 7வது முறையாக ஆசியக் கோப்பையை கைப்பற்றிய பெருமை பெறும். கோப்பையை முடிவு செய்யும் இந்தப் போட்டிகள் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளன.