கழற்றிவிடப்பட்ட தவான்... நான்கு புதுமுகங்களுடன் களமிறங்கவுள்ள கோலியின் இளம்படை! | Bcci announced Indian team for Test series against Windies

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (29/09/2018)

கடைசி தொடர்பு:22:00 (29/09/2018)

கழற்றிவிடப்பட்ட தவான்... நான்கு புதுமுகங்களுடன் களமிறங்கவுள்ள கோலியின் இளம்படை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இளம் வீரர் பிரித்வி ஷா இடம்பிடித்துள்ளார். 

கோலி

photo credit :@BCCI

ஆசியக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணி அடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்தியாவில் வைத்து நடைபெறவுள்ள இத்தொடரில் இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 4-ம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையில் களமிறங்கவுள்ள இதில், முன்னணி வீரர்கள் தவான், புவனேஸ்வர் குமார் உள்ளிட்டோர் இடம்பெறவில்லை. தொடர்ந்து அதிகமான போட்டிகளில் பங்கேற்றதற்காக முன்னணி வீரர்கள் பும்ரா, புவனேஷ்வர் குமார் இரண்டு பேருக்கும் டெஸ்டிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தொடரில் இடம்பெற்றிருந்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. காயம் காரணமாக இஷாந்த் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் சேர்க்கப்படவில்லை. அதேநேரம் இளம்வீரர்கள் பிரித்வி ஷா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், மாயன்க் அகர்வால் ஆகியோர் முதல்முறையாக இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோல் இங்கிலாந்து டெஸ்டில் கலக்கிய ரிஷப் பாண்ட், ஹனுமா விஹாரியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், பிரித்வி ஷா, மாயன்க் அகர்வால், சட்டீஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே (துணைக் கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close