`இவரது பந்துவீச்சை சந்திக்கப் பயந்ததுண்டு!’ - மனம் திறந்த சேவாக் | Virender Sehwag names the scariest bowler he faced in his career

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (01/10/2018)

கடைசி தொடர்பு:22:49 (01/10/2018)

`இவரது பந்துவீச்சை சந்திக்கப் பயந்ததுண்டு!’ - மனம் திறந்த சேவாக்

யாருடைய பந்துவீச்சை சந்திப்பதற்குப் பயம் என்ற ரகசியத்தை உடைத்துள்ளார், முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக். 

வீரேந்திர சேவாக்

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், தான் கிரிக்கெட் விளையாடியபோது, யாருடைய பந்துவீச்சுக்குப் பயந்தேன் என்பதைத் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தின் வாயிலாக லைவ் சாட்டில் ரசிகர்களுடன் இன்று உரையாடினார் சேவாக். அப்போது, ``நான் ஒரு பந்துவீச்சாளரைக் கண்டு பயந்தேன் என்றால், அது சோயப் அக்தர்தான். அவர், எந்தப் பந்தில் காலில் காயம் ஏற்படுத்துவார், எந்தப் பந்தில் தலையைப் பதம் பார்ப்பார் எனத் தெரியாது. நிறைய பவுன்சர்கள் வீசி என் தலையை அக்தர் காயப்படுத்தியுள்ளார். பலமுறை அவரது பந்துவீச்சைக் கண்டு பயந்துள்ளேன். அதேநேரம், அவரின் பௌலிங்கை நொறுக்குவது தனி மகிழ்ச்சி" எனக் கூறினார். 

இதேபோல, உலகக்கோப்பை வென்றது குறித்துப் பேசியவர், ``2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கு நாங்கள் இளம் அணியினராகச் சென்றோம். யாரும் நாங்கள் கோப்பை வெல்வோம் எனச் சிறிதும் நினைக்கவில்லை" என்றார்.

முன்னதாக, இதே லைவ் சாட்டில் உரையாற்றிய பாகிஸ்தான் அதிரடி பேட்ஸ்மேன் ஷாகித் அப்ரிடி,``எனக்கு எந்த பௌலர் மீதும் பயமில்லை. நான் பௌலிங் செய்யும்போதுகூட யாரையும் நினைத்து பயமில்லை. ஒரே ஒருவரைத் தவிர. அது யாரென்றால், சேவாக் தான். சேவாக்குக்கு பௌலிங் செய்வது கஷ்டமான விஷயம். அவருக்கு பௌலிங் செய்வதற்கு நான் பயந்துள்ளேன்" எனத் தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க