பெயர் பொறிக்கப்பட்ட ஸ்பெஷல் காலணி! - இன்ப அதிர்ச்சியில் ஹீமா தாஸ் | athlete Hima Das having her name on Adidas shoes

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (03/10/2018)

கடைசி தொடர்பு:12:25 (03/10/2018)

பெயர் பொறிக்கப்பட்ட ஸ்பெஷல் காலணி! - இன்ப அதிர்ச்சியில் ஹீமா தாஸ்

வெறுங்கால்களில் ஓடி பயிற்சி பெற்று இந்தியாவின் மிகச்சிறந்த தடகள வீராங்கனையாக மாறியுள்ள ஹீமா தாஸுக்கு அடிடாஸ் நிறுவனம் பிரத்தியேகக் காலணிகளைத் தயாரித்து வழங்கியுள்ளது.

ஹீமா தாஸ்

இந்திய தடகள  வீராங்கனை ஹீமா தாஸ் ஏழ்மையானக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கடுமையான பயிற்சியுடன் விடா முயற்சியும் கொண்ட இவர் தற்போது இந்திய தடகளத்தில் புதிய அடையாளமாக மாறியுள்ளார். சமீபத்தில், ஜகார்த்தாவில் நடந்த ஆசியப் போட்டியில் தொடர் ஓட்டத்தில் இந்தியக் குழு தங்கம் வெல்ல இவர் கொடுத்த ஸ்டார்ட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது. 

இந்தியாவின் சாதனை மங்கையான இவரை அடிடாஸ் நிறுவனம் விளம்பர மாடலாக ஒப்பந்தம் செய்துள்ளது. இனிமேல், அடிடாஸ் நிறுவனமே அவரின் ஸ்பான்ஸர். டெல்லியில் நேற்று நடந்த விழாவில் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட காலணிகள் அவருக்கு வழங்கப்பட்டன. காலணியில் 'ஹீமா தாஸ்' என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. 

 400 மீட்டர் ஓடடத்தில் இவர் தனித்திறமை கொண்டவர். பின்லாந்தில் நடந்த 20 வயதுக்குட்பட்ட சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்ற ஹீமா தாஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தினார். இந்தப் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பின்னரே இவரின் பெயர் வெளியே தெரிய ஆரம்பித்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close