வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (03/10/2018)

கடைசி தொடர்பு:14:05 (03/10/2018)

மனைவியிடம் இருந்து கொலை மிரட்டல் - துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கேட்கும் கிரிக்கெட் வீரர்

மனைவியிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதால் தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் பாதுகாப்பு வேண்டும் என இந்தியக் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி கேட்டுள்ளார்.

கிரிக்கெட்

இந்தியக் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது அவரின் மனைவி ஹாசின் ஜஹான் கடந்த பிப்ரவரி மாதம் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்தார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும் சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்தவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாவும், பாகிஸ்தான் பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் கணவருக்கு எதிராகக் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். ஆகஸ்ட் மாதத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார். தனக்கு ஜீவனாம்சமாக மாதத்துக்கு ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் என்றார்.

ஹாசின் ஜஹானின் குற்றச்சாட்டையடுத்து ஷமியின் ஒப்பந்தத்தை பி.சி.சி.ஐ தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. அவரிடம் விசாரணை மேற்கொண்ட பிறகே ஒப்பந்தத்தை நீட்டித்தது. இந்த நிலையில், மனைவியிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதால் தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் பாதுகாப்பு வேண்டும் என இந்தியக் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.