99 பந்தில் சதம்... 15 பவுண்டரி... 18 வயது... அறிமுக டெஸ்டிலேயே அசத்திய ப்ரித்வி ஷா! | Youngest Indian cricketer to score a Test match half century on debut.

வெளியிடப்பட்ட நேரம்: 12:49 (04/10/2018)

கடைசி தொடர்பு:13:03 (04/10/2018)

99 பந்தில் சதம்... 15 பவுண்டரி... 18 வயது... அறிமுக டெஸ்டிலேயே அசத்திய ப்ரித்வி ஷா!

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இதில் அபாரமாக ஆடிய வரும் இளம் வீரர் ப்ரித்வி ஷா சதம் அடித்துள்ளார்.
 

ப்ரித்வி ஷா

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ப்ரித்வி ஷாவும், லோகேஷ் ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ப்ரித்வி ஷாவுக்கு இது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி. அணி வீரர்கள் போட்டி தொடங்குவதற்கு முன்பு கரகோஷத்துடன் அவரை வரவேற்றனர். 

முதல் ஓவரை கேபிரியல் வீசினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் பந்தை எதிர்கொண்ட ப்ரித்வி ஷா, ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியில் வந்த பந்தை எதிர்கொள்ளாமல் விட்டார். அடுத்த பந்தில் மூன்று ரன்களை எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் ராகுல் முதல் ஓவரிலே எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். ப்ரித்வி ஷாவுடன் - புஜாரா இணைந்தார். ப்ரித்வி ஷா தனது இயல்பான பாணியில் அடித்து விளையாடி வருகிறார். தொடக்கத்தில் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாராவும் பிறகு ரன்குவிப்பில் ஈடுபட்டார். இருவரும் ரன் ரேட் 5க்கு குறையாமல் பார்த்துக்கொண்டனர். அதிரடியாக ஆடிய ப்ரித்வி ஷா 56 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவு செய்தார். சச்சின் டெண்டுல்கர், பார்தீப் பட்டேல்லுக்கு அடுத்தபடியாக குறைந்த வயதில் (18 வயது 329 நாள்கள்) அரைசதம் அடித்த வீரர் என்ற சிறப்பைப் பெற்றார். இந்திய அணி உணவு இடைவேளையின்போது 25 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்திருந்தது. ப்ரித்வி ஷா 75 ரன்களுடனும், புஜாரா 56 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

உணவு இடைவெளிக்குப் பின்னர் அதிரடியான ஆட்டத்தைத் தொடர்ந்த ப்ரித்வி ஷா, தன் கன்னி சதத்தைப் பதிவு செய்தார். அவர்  99 பந்துகளில் 101 ரன்களை எடுத்தார். குறைந்த வயதில் செஞ்சுரி அடித்த 7-வது வீரர் என்ற சிறப்பை ப்ரித்வி ஷா பெற்றுள்ளார். இந்தியா தற்போது ஒரு விக்கெட் இழப்பு 175  ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.


[X] Close

[X] Close