`அச்சமில்லா ஆட்டம் தொடரட்டும்!’ - வாழ்த்து மழையில் ப்ரித்வி ஷா | cricketers wishing debut Prithvi Shaw

வெளியிடப்பட்ட நேரம்: 18:24 (04/10/2018)

கடைசி தொடர்பு:20:01 (04/10/2018)

`அச்சமில்லா ஆட்டம் தொடரட்டும்!’ - வாழ்த்து மழையில் ப்ரித்வி ஷா

அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து அசத்திய ப்ரித்வி ஷாவுக்கு கிரிக்கெட் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ப்ரித்விஷா

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி சார்பில் அறிமுக வீரராகக் களமிறங்கிய ப்ரித்வி ஷாவின் அதிரடி ஆட்டம், ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில், தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய அவர், 154 பந்துகளில் 19 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அனுபவம் வாய்ந்த வீரர்களைப் போல் நேர்த்தியான பேட்டிங்கை அவர் வெளிப்படுத்தினார்.

19 வயதுகூட நிறைவடையாத இளம் ப்ரித்விக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டரில், ``முதல் இன்னிங்க்ஸில் இப்படியொரு தாக்குதல் ஆட்டத்தைப் பார்க்க அருமையாக உள்ளது. தொடர்ந்து அச்சமின்றி ஆடு'' என்று பதிவிட்டுள்ளார். ஹர்பஜன் சிங்,``என்ன ஒரு தருணம். 18 வயதில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, சதம் அடிப்பது. வாழ்த்துகள் ப்ரித்வி ஷா'' என்று தெரிவித்துள்ளார். வி.வி.எஸ்.லக்ஷ்மண், ``அருமையான சதம் ப்ரித்வி ஷா, 18 வயது வீரர், களத்தில் இறங்கி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதைக் காண்பது பெரிய விஷயம். உனக்கொரு ஒளிமயமான எதிர்காலம் உண்டு'' என்று பாராட்டியிருக்கிறார். சீனியர் வீரர்கள் தவிர, ப்ரித்வி ஷாவின் பேட்டிங்கை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். வாழ்த்துக்கள் ப்ரித்வி!.


[X] Close

[X] Close