ப்ரித்வி ஷா சதம்; புஜாரா, கோலி அரை சதங்கள்! - முதல் நாளில் இந்தியா ஆதிக்கம் #INDvWI | India reached 364 runs: loses 4 wicket at the end of first day in Rajkot test

வெளியிடப்பட்ட நேரம்: 18:14 (04/10/2018)

கடைசி தொடர்பு:20:00 (04/10/2018)

ப்ரித்வி ஷா சதம்; புஜாரா, கோலி அரை சதங்கள்! - முதல் நாளில் இந்தியா ஆதிக்கம் #INDvWI

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்திய அணி

வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ராஜ்கோட்டில் நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். அதன்படி ப்ரித்வி ஷாவும், லோகேஷ் ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். இன்றைய போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் ராகுல், முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, ப்ரித்வி ஷாவுடன் புஜாரா இணைந்தார். முதல் போட்டியிலேயே ப்ரித்வி ஷா அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா, 86 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய ப்ரித்வி ஷா, அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதத்தைப் பதிவுசெய்தார். அவருடன் விராட் கோலியும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  நிதானமாக ஆடிவந்த ப்ரித்வி ஷா, 134 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரையடுத்துக் களமிறங்கிய ரஹானே, 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரிஷப் பன்ட் களமிறங்கினார். இந்த ஜோடி, முதல்நாளில் மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டது. முதல்நாள் ஆட்டநேர முடிவில், கேப்டன் கோலி 72 ரன்களுடனும் ரிஷப் பன்ட் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

Pic courtesy: BCCI twitter


[X] Close

[X] Close