தெறிக்கவிடும் இந்திய பௌலர்கள் - 6 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி! #INDVsWI | west indies loses 6 wicket in rajkot test

வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (05/10/2018)

கடைசி தொடர்பு:17:54 (05/10/2018)

தெறிக்கவிடும் இந்திய பௌலர்கள் - 6 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி! #INDVsWI

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 649 ரன்கள் எடுத்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ்

photo credit :@icc

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணிக்கு ப்ரித்வி ஷாவும் லோகேஷ் ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். லோகேஷ் ராகுல் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தாலும் ப்ரித்வி ஷா, புஜாரா, கேப்டன் விராட் கோலி, ரிஷப் பன்ட் மற்றவர்கள் சிறப்பாக விளையாடினர். ப்ரித்வி ஷா, 134 ரன்களும் புஜாரா 86 ரன்களும், ரஹானே 41 ரன்களும் எடுத்து இருந்தனர்.

பிறகு 364 ரன்கள் எடுத்திருந்தபோது முதல்நாள் ஆட்டம் நேரம் முடிவுக்கு வந்தது. கோலி 72 ரன்களுடனும் ரிஷப் பன்ட் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. கோலியும் ரிஷப்பும் வெஸ்ட் இண்டீஸ் பௌலர்களின் பந்துவீச்சை நொறுக்கினர். விரைவாக ரன் சேர்த்த ரிஷப் 92 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மற்றொரு முனையில் ஆடிய கோலி 24 வது சதத்தைப் பூர்த்தி செய்தார். சிறப்பாக விளையாடிய அவர் 139 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின் இறங்கிய ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் முதல் சதத்தை பதிவு செய்தார்.

வெஸ்ட் இண்டீஸ்

photo credit :@icc

132 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் சதம் அடித்தார். இதன் பின் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 649 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் கோலி ஆட்டத்தை டிக்ளேர் செய்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. அந்த அணிக்கு இந்திய பௌலர்கள் தொடர்ந்து அதிர்ச்சி அளித்த வண்ணம் இருந்தனர். பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 29 ஓவர்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 94 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஷமி அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியைவிட 555 ரன்கள் பின்தங்கிய நிலையில் நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் தொடரவுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close