‘கடவுளை சந்தித்தேன் உரையாடினேன்!’ - பீலே குறித்து நெகிழும் பூட்டியா | I got to meet and speak with the God himself - Bhaichung Bhutia

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (06/10/2018)

கடைசி தொடர்பு:14:55 (06/10/2018)

‘கடவுளை சந்தித்தேன் உரையாடினேன்!’ - பீலே குறித்து நெகிழும் பூட்டியா

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே உடனான சந்திப்பு குறித்து பாய்ச்சங் பூட்டியா ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பூட்டியா

ஹிந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் சப்மிட் - 2018 (Hindustan Times Leadership Summit 2018) நிகழ்ச்சியில் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே பங்கேற்றார். பீலேவை இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்ச்சங் பூட்டியா பேட்டி கண்டார், அப்போது கால்பந்து மீது உங்களுக்கு ஆர்வம் வருவதற்கு காரணமாக இருந்தவர் யார் எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த பீலே என் தந்தை சிறந்த கால்பந்து வீரர். எனக்குக் கால்பந்து விளையாடக் கற்றுத்தந்தது. என்னை ஊக்கப்படுத்தியது. எனக்கு இன்ஸ்பிரேஷனும் எல்லாமே அவர் தான் எனக் கூறியிருந்தார்.
 
பீலே உடனான சந்திப்பு குறிப்பு பாய்ச்சங் பூட்டியா தனது ட்விட்டர் பக்கத்தில்,  “கால்பந்து மைதானம் எனக்கு எப்போதும் கோயில் போன்றது. ஆனால், நேற்று நான் கடவுளை சந்தித்தேன் அவருடன் உரையாடினேன். நன்றி பீலே” எனப் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.


[X] Close

[X] Close