`135 பந்துகளில் 202 ரன்கள்!’ - ரஹானேவின் சாதனையை முறியடித்த உத்தரகாண்ட் வீரர் #vijayhazaretrophy | Uttarakhand batsman becomes First man to hit Double Century in Vijay Hazare Trophy match

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (06/10/2018)

கடைசி தொடர்பு:21:17 (06/10/2018)

`135 பந்துகளில் 202 ரன்கள்!’ - ரஹானேவின் சாதனையை முறியடித்த உத்தரகாண்ட் வீரர் #vijayhazaretrophy

விஜய் ஹசாரே தொடரில் முதல் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்திருக்கிறார் உத்தரகாண்ட் அணி வீரர் கரண்வீர் கௌஷால். 

உத்தராகண்ட் வீரர் கரண்வீர் கௌஷால். 

Photo Credit: Twitter/@tazuddin101

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) நடத்தும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் உத்தரகாண்ட் - சிக்கிம் அணிகள் மோதிய போட்டி குஜராத்தின் நாடியாட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற சிக்கிம் ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து உத்தரகாண்ட் அணியின் இன்னிங்ஸை கரண்வீர் கௌஷால் மற்றும் வினீத் சக்ஸேனா ஆகியோர் தொடங்கினர். போட்டியின் தொடக்கம் முதலே சிக்கிம் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 296 ரன்கள் குவித்தது. இந்திய அளவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிபட்ச ஸ்கோர் இதுவே.

வினீத் சக்ஸேனா, 133 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய கரண்வீர் கௌஷால், 135 பந்துகளில் 202 ரன்கள் எடுத்தார். இதில், 18 பவுண்டரிகளும் 9 சிக்ஸர்களும் அடங்கும். உத்தரகாண்ட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 366 ரன்கள் குவித்தது. இதன்மூலம் விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைக் கரண்வீர் கௌஷால் பெற்றார். இதற்கு முன்பாகக் கடந்த 2007-08 சீஸனில் மும்பை அணி வீரர் ரஹானே எடுத்திருந்த 187 ரன்களே, விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்து வந்தது. 

உத்தரகாண்ட் அணி நிர்ணயித்த இமாலய இலக்கை நோக்கிக் களமிறங்கிய சிக்கிம் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் உத்தரகாண்ட் அணி, 199 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 


[X] Close

[X] Close