மெஸ்ஸி.... ரெனால்டோ... கால்பந்து ஜாம்பவான் பீலே அணியில் யாருக்கு இடம்? | Former football champion pele share his opinion about messi and Ronaldo

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (07/10/2018)

கடைசி தொடர்பு:04:00 (07/10/2018)

மெஸ்ஸி.... ரெனால்டோ... கால்பந்து ஜாம்பவான் பீலே அணியில் யாருக்கு இடம்?

ஹிந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் சப்மிட் - 2018 ( Hindustan Times Leadership Summit 2018) நிகழ்ச்சியில் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய கேப்டன் பாய்ச்சங் பூட்டியாவும் கலந்துகொண்டு பீலே விடம் கேள்விகள் கேட்டார். இந்தச் சந்திப்பு தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள பூட்டியா, இன்று நான் கடவுளைச்  சந்தித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பீலே

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜாம்பவான் பீலேவிடம், தற்போது கால்பந்து உலகில் கொடிகட்டி பறக்கும் மெஸ்ஸி மற்றும் ரெனால்டோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த பீலே,  ``மெஸ்ஸி, ரெனால்டோ, இருவரும் சிறந்த வீரர்கள். இவர்கள் இருவரையும் ஒப்பிடுவது கடினம். இருவரது ஆட்டமும் வேறுமாதிரியாக இருக்கும். நான் விளையாடும் காலத்தில் என்னையும் ஜார்ஜ் பெஸ்ட்டையும் ஒப்பிட்டுப் பேசுவார்கள். ஆனால், எங்கள் இருவரின் ஆட்டத்திலும் வித்தியாசம் இருக்கும். இருவரில் ஒருவரை எனது அணியில் தேர்வு செய்யச் சொன்னால், மெஸ்ஸி எனது தேர்வாக இருக்கும்” என்றார். 


[X] Close

[X] Close