‘20 விக்கெட்டுகள் என் இலக்கு’ - ஆஸ்திரேலியாவை எச்சரிக்கும் பாக்., வீரர் | Pakistan Spinner Yasir Shah targets 20 Australian scalps

வெளியிடப்பட்ட நேரம்: 11:03 (07/10/2018)

கடைசி தொடர்பு:11:03 (07/10/2018)

‘20 விக்கெட்டுகள் என் இலக்கு’ - ஆஸ்திரேலியாவை எச்சரிக்கும் பாக்., வீரர்

ஆஸ்திரேலியாவின் 20 விக்கெட்டுகளை கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளேன் எனப்  பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாஷிர் ஷா தெரிவித்துள்ளார்.

யாஷிர் ஷா - விக்கெட்

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்ததொடர் குறித்து பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் யாஷிர் ஷா பேசுகையில், “ இந்ததொடரில் ஆஸ்திரேலியாவின் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதை இலக்காக வைத்துள்ளேன்.  விக்கெட்டுகளை வீழ்த்துவது எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும் அதேபோல் இந்ததொடரை நாங்கள் வெல்வதும் முக்கியமானது. ஆஸ்திரேலியா அணியில்  ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாதது அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பு. அவர்கள் இருவரும் உலகத்தரம் வாயந்த கிரிக்கெட் வீரர்கள் அந்த இடத்தை நிரப்புவது மிகவும் கடினமானது. இருப்பினும் அந்த அணியில் சில தரம்வாய்ந்த வீரர்கள் உள்ளனர். பிக் பாஷ் தொடரில் நான் அவர்களுடன் விளையாடி உள்ளேன். அதனால் அவர்களின் பலம் மற்றும் பலவீனம் எனக்குத் தெரியும். அந்த அணி வலிமையானது இல்லை எனக் கூறமுடியாது.வேண்டுமானால் அனுபவம் இல்லாதவர்கள் எனக் கூறலாம். ஆனால் அவர்கள் பலமானவர்கள் தான். விக்கெட்டுகளை வீழ்த்தக் கடுமையாக உழைப்பேன். நான் எனது பழைய போட்டிகளைத் திரும்ப பார்ப்பேன் அதில் எவ்வாறு விக்கெட்டுகளை கைப்பற்றினேன். அதில் என்ன தவறு செய்தேன் என்பதைக் கண்டறிந்து அவற்றைத் திருந்திக்கொள்வேன் என்றார்.


[X] Close

[X] Close