வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (07/10/2018)

கடைசி தொடர்பு:15:30 (07/10/2018)

`இது நம்ம ஆட்டம்!’ - தமிழ் தலைவாஸை உற்சாகப்படுத்தும் விஜய் சேதுபதி

ப்ரோ கபடி லீக் குறித்து விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு கிடைத்த வரவேற்பையடுத்து மற்ற விளையாட்டுப் போட்டிகளையும் அதே பாணியில் களமிறக்கினர். கால்பந்து, பேட்மிண்டன், கபடி எனத் தொடர்ச்சியாக களமிறங்கின. பிரபல நடிகர்கள், விளையாட்டு வீரர்களை வைத்து இந்தப்போட்டிகள் பிரபலப்படுத்தப்பட்டன. அந்த வரிசையில் ப்ரோ கபடி லீக் 5 சீசன்கள் முடிந்து தற்போது 6-வது சீசன் தொடங்கியுள்ளது. ப்ரோ கபடி லீக்கின் 6-வது சீசன் இன்று தொடங்குகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதில் ‘பி’- பிரிவில் தமிழ் தலைவாஸ் அணி இடம்பெற்றுள்ளது.  இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி - பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப்போட்டி இன்று இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது.

இந்த லீக் தொடருக்கான தமிழ் தலைவாஸ் அணியின் தூதராக நடிகர் விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய போட்டி குறித்து விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில், “இது நம்ம ஆட்டம்! உங்களுக்காக தலைவாஸ் பாய்ந்து போராட உள்ளனர். உங்களையும் வீரர்களையும் உற்சாகப்படுத்த வருகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.