ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை! - விராட் கோலி, பும்ரா முதலிடம் | Virat, Bumrah tops latest ICC ODI rankings

வெளியிடப்பட்ட நேரம்: 17:27 (08/10/2018)

கடைசி தொடர்பு:17:46 (08/10/2018)

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை! - விராட் கோலி, பும்ரா முதலிடம்

ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை! - விராட் கோலி, பும்ரா முதலிடம்

ரு நாள்  கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன், பௌலர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது. இதில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 

அக்டோபர் 8-ம் தேதி வெளியான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில், முதல் ஐந்து இடங்களில் மூன்று இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். 884 புள்ளிகளுடன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 842 புள்ளிகளுடன் ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்திலும், 802 புள்ளிகளுடன் ஷிகர் தவான் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். பௌலர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், 797 புள்ளிகளுடன் இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 700 புள்ளிகளுடன் குல்தீப் யாதவ் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அணிகளுக்கான தரவரிசையைப் பொறுத்தவரை, 127 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதல் இடத்திலும் 122 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாம் இடத்திலும் உள்ளன. மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஒரு நாள் போட்டி தொடர்களில், இந்திய அணி வெற்றி பெற்றால், ஐ.சி.சி தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்தைப் பெறும் வாய்ப்பு உள்ளது.