வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (09/10/2018)

கடைசி தொடர்பு:03:00 (09/10/2018)

டஃப் கொடுத்த உ.பி அணி; போராடிய தமிழ்தலைவாஸ் - 5 புள்ளி வித்தியாசத்தில் தோல்வி!

ப்ரோ கபடி லீக் தொடரில், உ.பி அணியிடம் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது தமிழ் தலைவாஸ் அணி.

ப்ரோ கபடி

ப்ரோ கபடி தொடரின் ஆறாவது சீஸன், தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் பாட்னாவை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது தமிழ் தலைவாஸ் அணி. இந்நிலையில் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில் உ.பியின் யோதா அணியைத் தமிழ் தலைவாஸ் அணி எதிர்கொண்டது. எதிர்பார்ப்புகளுக்கிடையே துவங்கிய ஆட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்தலைவாஸ் அணி வீரர்கள் சொதப்பினர். அடுத்தடுத்து அவுட்டான அவர்கள் போட்டியின் 9வது நிமிடத்தில் மொத்தமாக வெளியேறினர்.

தமிழ் தலைவாஸ்

இதனால் 0-12 என்ற கணக்கு நிலவியது. பின் 13வது நிமிடத்தில் தன் முதல் புள்ளியை பதிவு செய்தது தமிழ் தலைவாஸ் அணி. இது ரசிகர்கள், இழந்த உற்சாகத்தை மீட்டெடுத்து நம்பிக்கையை விதைத்தது. யோதா அணி வீரர்களின் ஆதிக்கமே மேலோங்கியது. முதல் பாதியின் முடிவில்,  4-18 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் பின் தங்கியது. இரண்டாம் பாதி தொடங்கியது. இதில் 19-27 என யோதா அணியை தமிழ்தலைவாஸ் நெருங்கியது.

கபடி

விருவிருப்பாக நடைபெற்ற போட்டியில் 30-34 என்ற கணக்கில் ஆட்டம் தொடர்ந்தது. கடைசி 100வினாடிகளில் கடுமையாகப் போராடிய தமிழ்தலைவாஸ் அணி, இறுதியில் 5புள்ளிகள் வித்தியாசத்தில் 32-37 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.