`142/0-லிருந்து 202-க்கு ஆல்அவுட்!’ - ஆஸ்திரேலியாவைச் சுழற்றியடித்த பாகிஸ்தான் அறிமுகப் புயல் #Pa | Pakistan having 280 run leading over Australia in Dubai test

வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (09/10/2018)

கடைசி தொடர்பு:19:25 (09/10/2018)

`142/0-லிருந்து 202-க்கு ஆல்அவுட்!’ - ஆஸ்திரேலியாவைச் சுழற்றியடித்த பாகிஸ்தான் அறிமுகப் புயல் #Pa

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

பாகிஸ்தான் வீரர்கள்

Photo Credit: Twitter/@ICC

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 482 ரன்கள் குவித்தது. இதையடுத்து, முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸை உஸ்மான் கவாஜாவும், ஆரோன் பின்ச் ஆகியோர் தொடங்கினர். பாகிஸ்தான் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்ட இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது. பின்ச் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஷான் மார்ஷ் 7 ரன்களிலும், தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 85 ரன்களிலும் சில ஓவர்கள் இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இவர்களது விக்கெட்டை அறிமுக வீரர் பிலால் ஆசிஃப் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து நடையைக் கட்ட அந்த அணி, 83.3 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிலால் ஆசிஃப் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். முகமது அப்பாஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். விக்கெட் இழப்பின்றி 142 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணி 202 ரன்களுக்குப் ஆட்டமிழந்தது. இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் 280 முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுக்கு ஃபாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்து விளையாடுகிறது.


[X] Close

[X] Close