``பெண்ணை விட ஆண் உயரமாகத்தான்  இருக்க வேண்டுமா?” கோலியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள் | Indian skipper kohli gets trolled

வெளியிடப்பட்ட நேரம்: 10:28 (10/10/2018)

கடைசி தொடர்பு:10:28 (10/10/2018)

``பெண்ணை விட ஆண் உயரமாகத்தான்  இருக்க வேண்டுமா?” கோலியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

இந்திய அணியின் கேப்டன் கோலி, பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர் . தனது அசாத்திய பேட்டிங் திறமையால், கோடிக்கணக்கான ரசிகர்களைக்  கொண்டவர். களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையைச் செய்து அசத்திவருகிறார். இந்நிலையில், கடந்த 2 நாள்களாக  ட்விட்டர்வாசிகள் கோலியை வறுத்தெடுத்துவருகிறார்கள்.

 கோலி

சமீபத்தில், தனியார் நிறுவனம் சார்பில் பந்திராவில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடுசெய்திருந்த விழா ஒன்றில், இந்திய கேப்டன் கோலியும் கலந்துகொண்டார் . இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களும் கலந்துகொண்டனர். இளம் டென்னிஸ் வீராங்கனை கர்மன் கவுர் தண்டி, கூடைப்பந்து வீரர் சட்னம் சிங், ஆடில் பேடி, சிவானி கட்டாரியா எனப்  பலர் கலந்துகொண்டனர். 

இந்த நிகழ்ச்சியின்போது, கர்மன் கவுர் கோலியுடன் புகைப்படம் எடுக்க வந்தார். கர்மன் கவுர், கோலியை விட உயரமானவர் . இதனால் கோலி சிறிய மேடை போன்று இருந்த  உயரமான  இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்தப் புகைப்படங்களை வைத்து கோலியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவருகின்றனர். 'நீங்கள் யாராக  வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு பெண், ஆணை விட உயரமாக இருப்பதை ஏற்க முடியவில்லை, அப்படித்தானே' என ஆரம்பிக்க, பலர் இது தொடர்பாக ட்வீட் செய்தனர். ஒரு கிரிக்கெட் வீரராக இருந்துகொண்டு இதை நீங்கள் செய்யலாமா? எனப்  பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


 

அதே நேரத்தில், கோலிக்கு ஆதரவான சில கருத்துகள் பதியப்பட்டுவருகிறது. இதை அவர் நகைச்சுவையாகத் தான் செய்திருப்பார் என்றும்,  கர்மன் கவுர், கோலியின் அறக்கட்டளை மூலம் வந்தவர். அதனால், கோலியோ அல்லது கர்மன் கவுரரோ இதைத்  தவறாக எடுத்துக்கொள்ள  வாய்ப்பில்லை என்றும் சிலர் ட்வீட் செய்துள்ளனர். 


[X] Close

[X] Close