`ப்ரித்வி ஷாவை சேவாக்குடன் ஒப்பிடும் முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்தியுங்கள்!’ - கம்பீர் சொல்லும் லாஜிக் | Think twice before comparing Prithvi Shaw to Virender Sehwag says Gautam Gambhir

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (10/10/2018)

கடைசி தொடர்பு:21:40 (10/10/2018)

`ப்ரித்வி ஷாவை சேவாக்குடன் ஒப்பிடும் முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்தியுங்கள்!’ - கம்பீர் சொல்லும் லாஜிக்

ப்ரித்வி ஷாவை ஷேவாக் உடன் ஒப்பிடுவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்திப்பது நல்லது என கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பீர் தெரிவித்துள்ளார். 

ப்ரித்வி ஷா

மேற்கு இந்திய தீவுகளுடனான முதல் டெஸ்டில் அறிமுகமாகி சதம் அடித்து சாதனை படைத்துள்ள இளம்வீரர் ப்ரித்வி ஷாவுக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. பலரும் அவரது ஆட்டத்திறனை வெகுவாகப் பாராட்டி வருவதுடன், முன்னாள் வீரர்கள் சச்சின் மற்றும் ஷேவாக்குடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட பலரும் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். இதற்கு வரவேற்பும் அதே சமயம் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. `ஒரே ஓர் ஆட்டத்தை வைத்து அவரை ஜாம்பவான்களுடன் ஒப்பிட வேண்டாம். அவர் சாதிக்க இன்னும் நிறைய காலங்கள் உள்ளன' என நெட்டிசன்கள் முதல் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

இதேகோரிக்கையைத் தற்போது கெளதம் காம்பீரும் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ``ப்ரித்வி ஷாவை சேவாக்குடன் ஒப்பிடுவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்திப்பது நல்லது என நினைக்கிறேன். ஷேவாக் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியவர். அனுபவம் மிக்க வீரர். ப்ரித்வி ஷா திறமையான வீரர்தான். ஆனால், இப்போதுதான் அவரது கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியுள்ளது. அவர் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது

ஏராளமான சவால்கள், சாதனைகளை அவர் சந்திக்க வேண்டியுள்ளது. அப்படி இருக்கையில் இருவரையும் ஒப்பிட்டுப் பேசுவது என்பது அவசியமற்றது. யாரையும் யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதில்லை. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. ஒருநாள் போட்டிகளில் தோனிக்குப் பதிலாக ப்ரித்வி ஷா வருவதற்குச் சரியான நேரமா எனக் கேட்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை இது சரியான நேரமும் இல்லை, தவறான நேரமும் இல்லை. வயது என்பது இங்கு பொருட்டு கிடையாது. எவ்வளவு வயதானாலும் நீங்கள் எப்படிச் செயல்படுகிறீர்கள், உங்கள் திறமை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே உங்களுக்கான உரிய இடம் கிடைக்கும். ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய அணிக்குச் சவால்கள் காத்திருக்கிறது. ஸ்மித், வார்னர் இல்லாத்போதுகூட அவர்கள் இந்திய அணிக்கு கடும் சவால் அளிப்பார்கள்" எனக் கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close