வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (11/10/2018)

கடைசி தொடர்பு:14:50 (11/10/2018)

`சச்சின் டெண்டுல்கர், லாரா; சிறந்த பேட்ஸ்மேன் யார்?’ - வார்னேவின் ‘வாவ்’ ரிப்ளை!

சச்சின், லாரா இவர்களில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு, ஷேன் வார்னே சாமர்த்தியமாகப் பதிலளித்துள்ளார்.

ஷேன் வார்னே - சச்சின்

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே,  ‘நோ ஸ்பீன்’ என்ற பெயரில் தனது வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக எழுதியுள்ளார். இதுகுறித்து விழா ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம்,  இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர், வெண்டீஸ் வீரர் பிரெய்ன் லாரா இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இவர்கள் மூவரும் கிரிக்கெட்டில் சமகாலத்தில் சிறந்து விளங்கியவர்கள். இப்படி ஒரு கேள்வியை எதிர்ப்பார்க்காத வார்னே, சிக்கலில் மாட்டாமல் சாமர்த்தியமாகப் பதிலளித்தார்.  

''சச்சின், பிரெய்ன் லாரா இருவரும் நாங்கள் விளையாடிய காலகட்டத்தில் சிறந்த பேட்ஸ்மேன்கள். ஒரு டெஸ்ட் தொடரின் கடைசி நாளில் சதம் அடிக்க வேண்டும் என நான் எண்ணினால், லாராவை அனுப்புவேன். ஆனால், என் வாழ்நாள் முழுவதும் ஒருவர் பேட் செய்ய வேண்டுமென்றால், சச்சினை அனுப்புவேன். அவருடைய ஆட்டம் அற்புதமானதாக இருக்கும்'' எனப் பதிலளித்தார். மேலும்,

''இந்தப் புத்தகத்தில், எனது கிரிக்கெட் வாழ்க்கை, குழந்தைகள் போன்ற பல விஷயங்களை நேர்மையுடன் எழுதியுள்ளேன். இலங்கையில் சூதாட்ட விடுதியில் பணத்தை இழந்தது. இந்தியாவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல்போனது ஏன்? ஐபிஎல் போட்டியின்போது நடந்த சில சம்பவங்கள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளேன்'' என்று தெரிவித்தார்.