கால் போனாலும் கலங்காத ஆனந்தன்! - பாராலிம்பிக்கில் தடம்பதித்து சாதனை | TN player secures bronze at Asia Paralympics

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (11/10/2018)

கடைசி தொடர்பு:16:00 (11/10/2018)

கால் போனாலும் கலங்காத ஆனந்தன்! - பாராலிம்பிக்கில் தடம்பதித்து சாதனை

ஆசிய பாராலிம்பிக் தொடரின் 200 மீட்டர் தடகளத்தில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

சிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீட்டர் தடகளப் போட்டியில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன் குணசேகரன், ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராகப் பணியாற்றி வந்துள்ளார். 2008-ல் ராணுவ பகுதிக்கு அருகில் இருந்த குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில், ஆனந்தனின் இடது கால் பறிபோனது. 

தடகள வீரர் ஆனந்தன்

சிறு வயது முதலே தடகளத்தில் ஆர்வம் கொண்ட ஆனந்தன், போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சிகளைத் தொடங்கினார். 100, 200, 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பயிற்சி பெற்ற பின், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளத் தொடரில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளார். 

2018 பாராலிம்பிக் தொடரில், கால்களில் உள்ள குறைபாடு சார்ந்த பிரிவில், ஆண்களுக்கான 200 மீட்டர் போட்டியில் பங்கேற்ற ஆனந்தன், 24.45 நொடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இந்திய அணிக்கான பதக்கப் பட்டியலில் ஆனந்தனின் வெண்கலப் பதக்கம் சேர்ந்துள்ளது.