வெளியிடப்பட்ட நேரம்: 19:09 (11/10/2018)

கடைசி தொடர்பு:19:13 (11/10/2018)

`பும்ரா, புவனேஷ்வருக்கு ஓய்வு; ரிஷப் பன்ட்-க்கு வாய்ப்பு!’ - வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

photo credit:@bcci

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இளம் வீரர்கள் சகிதமாக களமிறங்கிய இந்தியா, முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றிபெற்றது. இரண்டாவது டெஸ்ட் நாளைத் தொடங்கவுள்ளது. இதையடுத்து, 5 போட்டிகள் ஒருநாள் தொடர் நடக்கவுள்ளது. இந்த நிலையில், முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் இருந்து கழற்றிவிடப்பட்ட தவான், ரோஹித் ஷர்மா ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளனர். 

அதேபோல் டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த கே.எல்.ராகுல், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஷர்துல் தாகூர் ஆகியோர் தங்கள் இடத்தைத் தக்கவைத்துள்ளனர். அதேநேரம் ரஹானே அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே டெஸ்ட் தொடருக்கு வீரர்கள் தேர்வில் கடும் சர்ச்சை எழுந்தது. முன்னாள் வீரர்கள் பலரும் பிசிசிஐ மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தனர். இந்த நிலையில்தான் தற்போது ஒருநாள் போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி விவரம்:

விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, மனிஷ் பாண்டே, தோனி, ரிஷப் பன்ட், ரவீந்திர ஜடேஜா, சஹால், குல்தீப் யாதவ், முகமது சமி, கலீல் அகமது, ஷர்துல் தாகூர், கே.எல்.ராகுல்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க