`உமேஷ் யாதவால் தலைவலி' - விராட் கோலி சொல்லும் பின்னணி! | Umesh Yadav's Performance Has Given Selection Headache, Says Virat Kohli

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/10/2018)

கடைசி தொடர்பு:07:07 (15/10/2018)

`உமேஷ் யாதவால் தலைவலி' - விராட் கோலி சொல்லும் பின்னணி!

உமேஷ் யாதவால் தலைவலி ஏற்பட்டுள்ளது என இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். 

photo credit: @BCCI

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் உமேஷ் யாதவ். சிறப்பாக செயல்பட்ட அவர் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 10 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முதல்முறையாக டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன்மூலம் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் கபில் தேவ், ஸ்ரீநாத் ஆகியோர் வரிசையில் உமேஷ் யாதவும் இடம்பிடித்தார். இதற்கிடையே, வெற்றிக்குப் பின் பேட்டியளித்த கேப்டன் கோலி, ``ஷர்துல் தாகூர் விளையாட முடியாமல் போனபோது கூடத் தனி ஒருவனாகப் போராடி விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் உமேஷ் யாதவ். உமேஷ் உண்மையாகவே சிறப்பாக செயல்பட்டார். இது எங்களுக்கு மிகுந்த சந்தோஷம். 

உமேஷ் யாதவ்வின் சிறப்பான ஆட்டத்தால் அடுத்த தொடருக்கு யாரை எடுப்பது என புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. வரவிருக்கும் ஆஸ்திரேலியா தொடர் மிகக் கொடூரமாக இருக்கலாம். இங்கிலாந்தில் பந்துவீச்சு எடுபடாததைப் போல் அங்கு இருக்காது. அங்கு நன்றாக வேகமாக வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் தேவை. அதற்கு உமேஷ் சரியாக இருப்பார் என நினைக்கிறேன். உமேஷைப் பொறுத்தவரை 140க்கு மேல் வேகம் வீசக்கூடிய திறன்பெற்றுள்ளார். முக்கியமான நேரங்களில் விக்கெட் எடுக்கிறார். மேலும், நன்றாக பவுன்ஸ் வீசுகிறார். எனினும் ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா என இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்படுவதால் யாரைத் தேர்வு செய்வது என்பது தேர்வுக்குழுவுக்கு பெரிய தலைவலியாக இருக்கும்" எனக் கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க