‘386 இன்னிங்ஸ்; 60 சதங்கள்’ - சச்சின் சாதனையை பிரேக் செய்த கோலி! | Virat Kohli breaks Sachin Tendulkar's record,

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (22/10/2018)

கடைசி தொடர்பு:07:30 (22/10/2018)

‘386 இன்னிங்ஸ்; 60 சதங்கள்’ - சச்சின் சாதனையை பிரேக் செய்த கோலி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று  நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

விராட் கோலி

Photo Credit: ICC

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வுசெய்தது. ஹெட்மெயர் சதத்தின் உதவியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 322 சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே தவான் விக்கெட்டை இழந்தது. இதையடுத்து ரோகித் ஷர்மா - விராட் கோலி இணை கைகோத்தன. சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி, வெற்றியை எளிதாக்கியது. இந்திய  அணி 42.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ரோஹித் ஷர்மா 152 ரன்களுடனும் அம்பாதி ராயுடு 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்தப் போட்டியில், விராட் கோலி 140 ரன்கள் எடுத்தார்.

ஒரு நாள் போட்டியில் தனது 36-வது சதத்தை விராட் கோலி பூர்த்திசெய்தார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியைச் சேர்ந்தால், இது அவரது 60-வது சதமாகும். இதற்காக கோலி 386 இன்னிங்ஸை எடுத்துக்கொண்டார். இதன்மூலம் குறைந்த இன்னிங்ஸில் 60 சதத்தைப் பதிவுசெய்த வீரர்களின் பட்டியலில் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்த சிம்மாசனத்தில் சச்சின் டெண்டுல்கர் நீண்ட காலமாக அமர்ந்திருந்தார். அவர், 426 இன்னிங்ஸில் 60 சதமடித்திருந்தார். இந்தச் சாதனையை தற்போது கோலி முறியடித்துள்ளார்.