வெளியிடப்பட்ட நேரம்: 17:42 (24/10/2018)

கடைசி தொடர்பு:17:42 (24/10/2018)

205 வது இன்னிங்ஸ்... 10,813 வது பந்து... கோலியைக் கொண்டாடும் நெட்டிசன்கள்! #kingkohli

ந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியை சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. ஒரு நாள் போட்டிகளில் வேகமாக 10,000 ரன்களைக் கடந்த ‘ரன் மெஷின்’, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என விராட் கோலி எடுக்கும் ஒவ்வொரு ரன்னிலும் எதோ ஒரு சாதனை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார். 

கோலி

கெளஹாத்தியில் நடைபெற்ற  முதலாவது ஒருநாள் போட்டியில் 140 ரன்கள் அடித்து அசத்திய கோலி, தனது 36-வது சதத்தைப் பதிவு செய்தார். இன்றைய போட்டியில் கோலி 91 பந்துகளில் 81 ரன்கள் எடுத்திருந்தபோது, ஒருநாள் போட்டியில் 10,000 ரன்கள் கடந்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அதோடு, ஒருநாள் அரங்கில் தன் 37-வது சதத்தைக் கடந்தார். இதை இணையத்தில் கொண்டாடித் தீர்த்தனர் கோலி ரசிகர்கள். அதன் விவரம்...

ஒரு நாள் போட்டிகளில்... விராட் கோலியின் வேகம்

ரன்கள்          இன்னிங்ஸ்   
அதிவேக 8,000 ரன்கள் 175
அதிவேக 9,000 ரன்கள் 194
அதிவேக 10,000 ரன்கள்       205

 

10,000 ரன்கள் கடந்த இந்திய வீரர்கள்

வீரர்         ரன்கள்     
சச்சின் டெண்டுல்கர்         18,426 
சவுரவ் கங்குலி 11,221
ராகுல் டிராவிட் 10,768
எம்.எஸ்.தோனி 10,143
விராட் கோலி   10,000* 

 

ஒரு நாள் போட்டியில்...அதிவேக 10,000 ரன்கள் (இன்னிங்ஸ்)

வீரர்       இன்னிங்ஸ்       
விராட் கோலி  205
சச்சின் டெண்டுல்கர்            259
சவுரவ் கங்குலி 263
ரிக்கி பாண்டிங் 266
ஜாக் காலிஸ் 272