வெளியிடப்பட்ட நேரம்: 05:40 (27/10/2018)

கடைசி தொடர்பு:10:56 (27/10/2018)

`ஹாட்ரிக் சதம் விளாசுவாரா கோலி!” - வெற்றிக் கணக்கைத் தொடங்குமா வெஸ்ட் இண்டீஸ்

இந்தியா- மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புனேவில் இன்று நடைபெறுகிறது. கோலி ஹாட்ரிக் சதம் அடிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கோலி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது. தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கவுகாத்தியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கோலியின் அதிரடி ஆட்டத்தால் 321 ரன்களை குவித்தது. இந்தப் போட்டியில் கோலி ஆட்டமிழக்காமல் 157 ரன்களை எடுத்தார். குறைந்த போட்டியில் 10,000 ரன்களை கடந்த வீரர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் உள்ளிட்ட சாதனைகளுக்குச் சொந்தக்காரரானார்.


கடினமான இலக்காக இருந்தாலும் ஹெட்மேயர் - ஹோப் ஜோடி நிலைத்து நின்று இந்திய ரசிகர்களின் கனவைத் தகர்த்தனர். ஆட்டத்தின் கடைசிப் பந்து வரையிலும் போட்டி நீண்டது. இறுதியில் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டு போட்டியிலும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் தாராளம் காட்டினர். இரு போட்டிகளிலும் மேற்கு இந்திய தீவுகள் அணி 300 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி புனேவில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டி மதியம் 1.30 மணிக்குத் தொடங்குகிறது. ஓய்வில் இருந்த புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் அணிக்குத் திரும்புவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் சதம் விளாசிய கேப்டன் விராட் கோலி மூன்றாவது போட்டியில் ஹாட்ரிக் சதம் அடிப்பாரா என்ற ஆவலில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.