வெளியிடப்பட்ட நேரம்: 09:04 (28/10/2018)

கடைசி தொடர்பு:09:05 (28/10/2018)

`அவசரப்பட்ட ரஹானே; சிக்னல் கொடுத்த ரெய்னா’ - மைதானத்தில் நடந்த சுவாரஸ்யம்!

தியோதர் டிராபி இறுதிப்போட்டியில், இந்தியா சி அணிக்காக விளையாடிய ரஹானே, சதமடித்ததாக எண்ணி 97 ரன்களில் பார்வையாளர்களை நோக்கி பேட்டை நீட்டினார். ரெய்னா கொடுத்த சிக்னலையடுத்து, அவர் தனது தவறை உணர்ந்து மீண்டும் ஆட்டத்தை தொடர்ந்தார். இந்த சம்பவத்தை அனைவரும் வியந்து பார்த்தனர்.

ரஹானே


டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் தியோதர் டிராபிக்கான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ரஹானே தலைமையிலான இந்தியா சி அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரஹானே, இஷான் கிஷண் இருவரும் களமிறங்கி, தங்களது அதிரடி ஆட்டத்தால், இந்தியா பி அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர். இந்த அணி 30.3 ஓவரில் 210 ரன்களை சேர்த்தது. இஷான் 87 பந்தில் 114 ரன்களை குவித்தார். ரஹானே 156 பந்துகளில் 144 ரன்களை சேர்த்தார். இதனிடையே, ரஹானே 97 ரன்களை குவித்திருந்த நிலையில், தான் சதமடித்ததாக எண்ணி பார்வையாளர்களை நோக்கி பேட்டை நீட்டினார்.

 

 

 

 

அப்போது ஸ்கோர் போர்டில் 97 ரன்கள் இருந்தது. ஆனால் அதை அவர் கவனிக்கவில்லை. தான் சதமடித்ததாக நினைத்து பார்வையாளர்களை நோக்கி பேட்’டை நீட்டியது, அங்கிருந்தவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. பின் ட்ரெஸ்ஸிங் ரூமிலிருந்து ரெய்னா சிக்னல் காட்டினார். இன்னும் 3 ரன்கள் மீதமுள்ளது என ரெய்னவின் சிக்னலை புரிந்து கொண்ட ரஹானே, சிரித்தபடியே மீண்டும் ஆட்டத்தை தொடர்ந்தார். இதையடுத்து அவர் சதம் விளாசினார். இச்சம்பவம் அவரது ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. மேலும், இந்த போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் ரகானே தலமையிலான இந்தியா சி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.