மிரள வைத்த ரோஹித்; ஒரு ரன்னில் சாதனையைத் தவறவிட்ட தோனி! - வெ.இ அணிக்கு 378 ரன்கள் இலக்கு | india scored against 377 west indies

வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (29/10/2018)

கடைசி தொடர்பு:18:18 (29/10/2018)

மிரள வைத்த ரோஹித்; ஒரு ரன்னில் சாதனையைத் தவறவிட்ட தோனி! - வெ.இ அணிக்கு 378 ரன்கள் இலக்கு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 377 ரன்களை குவித்தது. ரோஹித் ஷர்மா அதிகபட்சமாக 162 ரன்களை குவித்துள்ளார்.

ரோஹித்

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 3 ஒருநாள் போட்டிகளில் இரண்டு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. ஒரு போட்டி ட்ராவில் முடிந்தது. இந்நிலையில், 4 வது ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள பார்போன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அணிக்கு ரோஹித் ஷர்மா- ஷிகர் தவான் இணை தொடக்கம் கொடுத்தது. இந்த இணையை 11ஓவரின் 5 வது பந்தில் பவேல் பிரித்தார்.

இதையடுத்து ரோஹித் ஷர்மாவுடன்- கோலி கைகோத்தார். எப்படியும் இந்த ஆட்டத்திலும் சென்சுரி இருக்கு என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு 16-வது ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது. கேமர் ரோச் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கோலி.17-வது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 102 ரன்களை சேர்ந்திருந்தது இந்திய அணி. தொடர்ந்து ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. ரோஹித்தும் - ராயுடுவும் களத்தில் நின்று, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சுகளை பறக்கவிட்டனர். கோலியினால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ரோஹித் நிறைவேற்றினார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 137 பந்துகளில் 162 ரன்களை குவித்தார்.

43.5 ஓவரில் நர்ஸ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்த அவுட்டானார். இதையடுத்து இறங்கி தோனி களமிறங்கினார். மற்றொரு புறம் ஃபார்மில் இருந்த ராயுடு, 81 பந்துகளில் 100 ரன்களை குவித்தார். அடுத்து வந்த தோனி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியாவுக்காக விளையாடிய ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் எடுக்க இருந்த நிலையில் 9999 ரன் எடுத்திருந்தபோது தோனி ஆட்டம் இழந்தார். ஒரு ரன்னில் தோனி சாதனையைத் தவறவிட்டார். இதுவரை ஒருநாள் போட்டிகளில் (Asia XI சேர்த்து) தோனி 10173 ரன்கள் எடுத்திருக்கிறார்.  இறுதியாக கேதர் ஜாதவ் மற்றும் ரவிந்திர ஜடேஜா களத்தில் உள்ள நிலையில், இந்திய அணி, 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 377 எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேமர் ரோச் 2 விக்கெட்டுகளையும், நர்ஸ் மற்றும் பால் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.