வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (31/10/2018)

கடைசி தொடர்பு:18:42 (31/10/2018)

கேரளாவுக்கு வாருங்கள் மக்களே! - அழைப்பு விடுக்கும் விராட் கோலி

'கடவுளின் பிரதேச அமைதியை, ஆற்றலைக் காண எல்லோரும் கேரளா வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்' என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

விராட் கோலி

photo credit: @gracetravelmart

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையேயான 5-வது ஒருநாள் போட்டி, நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.  அதில், இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில், எளிதாகக் கோப்பையைக் கைப்பற்ற முடியும். இதற்காக இரு அணி வீரர்களும் விமானம் மூலம் நேற்று திருவனந்தபுரம் வந்தனர்.

அவர்களுக்கு, கேரள பாரம்பர்ய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சமீபத்தில் நிகழ்ந்த பேரிடருக்குப் பிறகு, கேரளாவில் நடக்கும் முதல் சர்வேதேசப் போட்டி இதுவாகும். இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேரிடரிலிருந்து மீண்ட கேரளா, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என கேரளாவுக்கு வந்துள்ள விராட் வாழ்த்தியுள்ளார். 

அவர் தங்கியுள்ள ஹோட்டல் மூலம் குறிப்பு ஒன்றை எழுதியுள்ள கோலி, ``கேரளாவில் இருக்கும்போது இன்பத்துக்குக் குறைவில்லை. இங்கு வருவதை நான் எப்போதும் விரும்புவதுடன், இந்த இடத்தின் ஆற்றலை மிகவும் நேசிக்கிறேன். நான் அனுபவித்ததிலிருந்து சொல்கிறேன், கடவுளின் தேசமான கேரளாவின் அழகு அனுபவித்துப் பார்க்க வேண்டிய ஒன்று.

கடவுளின் பிரதேச அமைதியை, ஆற்றலைக் காண எல்லோரும் இங்கு வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். கேரளா, வெள்ளப் பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டது. இப்போது, சுற்றுலா வர பாதுகாப்பான இடமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை நான் இங்கு வரும்போதும் என்னை மகிழ்விக்கும் கேரளாவுக்கு நன்றி'' என்று கூறியுள்ளார். இதை, கேரள மக்கள் பகிர்ந்துவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க