வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (01/11/2018)

கடைசி தொடர்பு:17:15 (01/11/2018)

319 பந்துகளில் 556 ரன்கள்... அசத்திய 13 வயது லிட்டில் மாஸ்டர்

14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் குஜராத் சிறுவன் 556 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

கிரிக்கெட்

ஸ்ரீ டி.கே.கேக்வாட் 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் குஜராத்தில் நடைபெற்று வருகிறது. வதோரா கிரிக்கெட் அகாதமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் யோகி கிரிக்கெட் அகாதமி அணியும் மொஹீந்தர் லலா அமர்நாத் கிரிக்கெட் அகாதமி அணியும் மோதின. இந்தப் போட்டியில் 13 வயது இளம் வீரர் பிரியான்ஷூ மோலியா 9 (Priyanshu Moliya) 556 ரன்களைக் குவித்து அசத்தினார். 2 நாள்கள் பேட் செய்த மோலியா 319 பந்துகளில் 556 ரன்களை விளாசியுள்ளார். இவரது அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 826 ரன்களை எடுத்தது. இந்தப் போட்டியில் லலா அமர்நாத் கிரிக்கெட் அகாதமி இன்னிங்ஸ் மற்றும் 689 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த ஜூனியர் கில்லாடிக்கு சச்சின் டெண்டுல்கரும் விராட் கோலியும்தான் ரோல் மாடல் என்கிறார். சச்சினின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியைப் பின்பற்றுவதாகும். விராட் கோலியின் பேட்டிங் நுணுக்கங்கள் மற்றும் அவரது ஸ்டைலான ஆட்டத்தை ஆட முயற்சி செய்து வருவதாகப் பிரியான்ஷூ மோலியா கூறுகிறார்.